TamilsGuide

ரவியின் ஆசனம் குறித்து ஐ.தே.க.வுக்குள் குழப்பம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லசந்த குணவர்தன இந்த கோரிக்கையை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் மூலமாக கோரியுள்ளார்.

கட்சியின் செயலாளர் ரவி கருணாநாயக்க இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முறையான நடைமுறை மற்றும் கட்சியின் அங்கீகாரம் இன்றி பெற்றுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கட்சியின் அரசியலமைப்பை கடுமையாக மீறும் செயலாகும் என்பதால், கட்சியின் செயற்குழுவை விரைவில் கூட்டி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவெடுக்க வேண்டும் என்றும் லசந்த குணவர்தன கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment