TamilsGuide

பெரும் தொகைக்கு ஏலம் போன கடைசி பிரெஞ்சு ராணியின் வைர நெக்லஸ்

பிரபல பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட்டின் வைர நெக்லஸ் ஏலத்தில் மிகப்பெரிய விலைக்கு விற்பனைக்கு சென்றுள்ளது.

வரலாற்றில் பிரபலமான ராணி மேரி அன்டோனெட்டின் வைர நெக்லஸ் ஏலத்தில் $4.81 மில்லியன் தொகை என்ற மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகியுள்ளது.

ஜார்ஜியன் காலத்தின் இந்த ஆடம்பர நகை கிட்டத்தட்ட 500 வைரங்களால் அலங்கரிக்கப்பட்டது.

இந்த நகையானது, புதன்கிழமை மாலை ஜெனிவாவில் சோத்பியின் ஏல நிறுவனம் எதிர்பார்த்த மதிப்பீட்டை விட இரட்டிப்பாக விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1780களில் நடந்த "வைர நெக்லஸ் விவகாரம்", மோசடித் திட்டம் மற்றும் ராஜ குடும்பத் தொடர்புகள் தொடர்பான ஊழல் ஒன்றில், மேரி அன்டோனெட்டின் நற்பெயரை களங்கப்படுத்தியது.

அத்துடன் பொது மக்களின் அதிகரித்து வந்த அதிருப்தி இறுதியில் பிரெஞ்சு புரட்சிக்கு வழிவகுத்தது.

சுவாரஸ்யம் என்னவென்றால், ஏலத்தில் விற்கப்பட்ட இந்த நெக்லஸ் சமீபத்தில் ராஜ குடும்ப தொடர்பு கொண்டுள்ளது.

அதாவது 1953 இல் ராணி எலிசபெத் II மற்றும் 1937 இல் மன்னர் ஜார்ஜ் VI ஆகியோரின் முடிசூட்டு விழாக்களில் அங்கில்சியின் மார்க்வெஸ்(Marquess of Anglesey) ஆல் அணிந்து கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment