TamilsGuide

அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பது முக்கியம்-ஜீவன் தொண்டமான்

அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கு நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பது முக்கியமானதாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளங்களினூடான பதிவுகளிலே இவ்வாறு கருத்து பகிர்ந்துக்கொண்டுள்ளார்

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அதிகூடிய பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கு நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பது முக்கியமான ஒன்றாகும் என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனமானது காஞ்சன விஜயசேகரவுக்கு வழங்கப்படும் என நான் நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எமது நாட்டின் வரலாற்றில் எரிசக்தி துறையில் மிகவும் குறிக்கோலான மற்றும் கடினமான சீர்திருத்தங்களுக்கு காஞ்சன அவர்கள் தலைமை தாங்கினார். நமது எரிசக்தி துறையில் போட்டி, நியாயமான விலை நிர்ணயம் மற்றும் மக்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றிக்கு அவர் திடமான திட்டங்களை அமைத்தார். அவர் எடுத்த முடிவுகளின் அரசியல் விளைவு தனக்கு நல்லதாக இருக்காது என்பதை அறிந்தே இதையெல்லாம் செய்தார்.

அத்துடன் மின்சாரச் சட்டத்தில் அவரது சீர்திருத்தங்களை நாம் பின்பற்றினால், இலங்கை மின்சார சபை இன் அதிக விலைகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு ஆகியவற்றால் இலங்கையர்கள் சிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருளைப் போலவே, இலங்கையர்கள் தங்கள் ஆற்றல் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஏகபோகங்களிலிருந்து விடுபடுவதற்கும் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment