உலகின் பிரபல பொப்பிசை பாடகி டெய்லர் ஷிப்ட்டின் இசை நிகழ்ச்சியை பயன்படுத்திப் பாரிய மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ பெர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த 400 பேர் மோசடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படகின்றது.
சுமார் மூன்று லட்சம் டொலர்கள் வரையில் இவ்வாறு மக்களிடம் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி இவ்வாறு பெருமளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கட் கொள்வனவின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இணைய வழியிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பல மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.