கனடாவில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் திணைக்கள பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அறக்கட்டளைகள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டத்தினால், கனடாவில் இயங்கி வரும் அறக்கட்டளை நிறுவனங்களினால் பணம் திரட்டுவதற்கு முடியாத நிலைமை உருவாகி உள்ளது.
நத்தார் பண்டிகையை கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு பணி நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவது தமது செயற்பாடுகளை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 55 ஆயிரம் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டமானது மில்லியன் கணக்கான கனடியர்களை பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.