முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 24 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் நுழைந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 650,000 வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
இதற்கிடையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 35, 236 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
ஒரு ஆசனங்களையும் கைப்பற்ற தவறியுள்ளது. இதேவேளை, பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளும் இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.