உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக புதினை விமர்சித்த 'செஃப்' அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஓட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷியாவை விட்டு வெளியேறினார்.
பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட அலெக்ஸி ஜிமின் ரஷியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தே ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மக்களிடையே புகழ்பெற்றார்.
பின்னர் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் - ரஷிய போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை அலெக்ஸி ஜிமின் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து 'குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியாவிற்கு அலெக்ஸி ஜிமின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.