TamilsGuide

மட்டக்களப்பின் தேர்தல் நிலவரம்

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 442 வாக்களிப்பு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான வாக்கு பெட்டிகள் இன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கு தேர்தல் மத்திய நிலையமான இந்துகல்லூரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

இதில் தேர்தல் கடமைக்கு 6 ஆயிரத்து 750 பேர் ஈடுபடவுள்ளதுடன் வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து கல்லூரியில் தேர்தல் மத்தியஸ்தானத்தில் தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்கள் உட்பட 46 நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை 233 தேர்தல் சட்ட விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் எந்தவிதமான தேர்தல் வன்முறைகளும் இதுவரை கிடைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தேர்தலில் 5 பிரதி நிதிகளை பெறுவதற்காக 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குழுகள் உட்பட 49 கட்சிகளை சேர்ந்த 392 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment