TamilsGuide

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை மீண்டும்

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான ரயில் பாதையின் அபிவிருத்தித் திட்டத்தின் காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று முதல் கொழும்புக்கும் தலை மன்னாருக்கும் இடையில் ரயில் சேவைகள் பின்வருமாறு அட்டவணையில் இயக்கப்படும்:

கொழும்பு கோட்டை – தலைமன்னார்

12.11.2024 முதல் – கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 04.15 மணிக்கு புறப்படும், இரவு 10.15 மணியளவில் மன்னாரை சென்றடையும்.

தலைமன்னார் – கொழும்பு கோட்டை

13.11.2024 முதல் – தலை மன்னாரிலிருந்து அதிகாலை 04.15 மணிக்கு புறப்படும், காலை 10.15 மணிக்கு கொழும்பு, கோட்டையை வந்தடையும்.
 

Leave a comment

Comment