டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவான நிலையில், ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை சென்று தமது பொறுப்புக்களைக் கையேற்பதற்கு முன்னர் மேலும் இரு முக்கிய நியமனங்களை செய்துள்ளார்.
குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவில் பணிப்பாளராக பணியாற்றிய ரொம் ஹோமனை உயர்மட்ட எல்லை பாதுகாப்பு செயல் பணிப்பாளராக நியமித்துள்ளார்.
இது தவிர நியூயோர்க் கொங்கிரசின் எல்சி ஸ்ரீபனிக் எனும் பெண்மணியை ஐக்கிய நாடுகளிற்கான அமெரிக்கத் தூதராக நியமித்துள்ளதாக 'நியூயோக் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி அமெரிக்க காங்கிரசின் முழு கட்டுப்பாட்டை நோக்கி நெருங்கிச் செல்கின்றது.
ஏற்கனவே செனேட்டின் பெரும்பான்மையை சுவீகரித்துள்ள நிலையில் ஒரு சில இடங்களை மட்டுமே வெல்ல வேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.