TamilsGuide

ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது -ரஞ்சன் ராமநாயக்க

”ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது” என கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.நாம் ஊழல்மோசடியாளர்களும் இல்லை.

ஊழல்வாதிகனை பாதுகாப்பவர்களும் இல்லை. ஊழல்வாதிகளுடன் இணைந்து செயற்படுபவர்களும் இல்லை.கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் இலஞ்சம் பெறுவோர் போதைப்பொருள் மோசடியாளர்கள் தொடர்பாக நாடாளுமன்றுக்குள் தைரியமாக பேசினோம்.அப்பாவி பொதுமக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தகுதியுடையவர்களே நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.

பொதுத்தேர்தல் மாத்திரம் அல்ல இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் நாம் வெற்றிபெறுவோம்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment