TamilsGuide

மக்களுக்காக குரல் கொடுப்பதற்காகவே ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி களமிறங்கியுள்ளது- டில்ஷான்

ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சிக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவளித்துவருகின்றனர் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்

களுத்துறையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் தெரிவித்துள்ளார்

அதன்படி பிரதான நகர மக்கள் மாத்திரமன்றி இன்று கிராமப்புற மக்களும் எம்முடன் இணைந்துள்ளனர் என்றும் புதிதாக ஆரம்பிக்க எமது கட்சிக்கு குறுகிய காலத்திலேயே மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

மேலும் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காகவே ஐக்கிய ஜனநாயகக்குரல் தேர்தலில் களமிறங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a comment

Comment