TamilsGuide

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு

2024 ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2024 செப்டெம்பரில் 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் கையிருப்பு, 2024 ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது 7.9% அதிகரிப்பு ஆகும்.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்ட தொகையும் அடங்கும்.

இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.

2020 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
 

Leave a comment

Comment