சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க குடிமகன் ஒருவரை ஜேர்மனி வியாழக்கிழமை கைது செய்துள்ளது.
மார்ட்டின் டி என மட்டுமே அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பிராங்பேர்ட்டில் கைது செய்யப்பட்டதாகவும், அவரது வீடு சோதனையிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சமீப காலமாக ஜேர்மனியில் அமெரிக்க ஆயுத படையிலிருந்தும், சீன ரகசிய புலனாய்வு சேவைக்கு தகவல்களை வழங்க சம்மதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அவர் சீன அரசாங்க முகவர்களை தொடர்பு கொண்டு, அமெரிக்க ராணுவத்தின் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை சீன புலனாய்வு சேவைக்கு வழங்க விரும்பியுள்ளார்.
ஆனால் அவர் எந்த தகவலையும் சீன அதிகாரிகளுக்கு தரவில்லை என்று கூறப்படுகிறது.
ஜேர்மனி, இந்த ஆண்டில் பலரை சீனாவுக்காக புலனாய்வு செய்ததாக சந்தேகித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.