அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றியீட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து கனடாவிற்கு எவ்வாறு புலம் பெயர்வது என பலர் கூகுளில் தேடியுள்ளனர்.
google தேடுதளத்தில் கனடாவிற்கு புலம்பெயர்வது தொடர்பான தகவல்களை தேடியவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் வெற்றி ஈட்டிய மாநிலங்களான பெர்மான்ட், மெயின், நியூ ஹம்ஸ்யார், ஓர்கான், மினிசோட்டா போன்றவற்றில் இவ்வாறு அதிக அளவானவர்கள் கனடாவிற்கு புலம்பெயர்வது குறித்து தேடியுள்ளனர்.
கனடாவிற்கு புலம்பெயர்வது எவ்வாறு? கனடாவில் குடியேறுவது எவ்வாறு? கனடாவில் வாழ்வதற்கு சிறந்த இடங்கள் எவை? கனடிய விசா பெற்றுக் கொள்வது எவ்வாறு? போன்ற கேள்விகளின் வழியாக google தேடுதளத்தின் ஊடக பல அமெரிக்கர்கள் தேடல்களையும் மேற்கொண்டுள்ளனர்.