ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதன்படி மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது.
அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டில் இது 10-வது நாடுதழுவிய மின் நிறுத்தம் ஆகும்.
இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பவர் கிரிட் செயலிழந்ததால் போதுமான மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மறு சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.