TamilsGuide

ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர் -சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச இதனைக்  குறிப்பிட்டார்.

இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.இந்த நேரத்தில் நாட்டை கட்டியெழுபபுவதற்கான ஒரு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தியிடமே காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பலமான அரசாங்கத்தை உருவாக்குவோம்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிப்பதாக ஜனாதிபதி தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். அது இன்னும் தேர்தல் வாக்குறுதியாகவே உள்ளது வரி, எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் எனவும், குறிப்பிட்டார் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் சாதாரண மக்கள் உண்ணும் அரிசி மற்றும் தேங்காயை மலிவு விலையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதது” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment