TamilsGuide

பாடசாலை சீருடைக்கான சீனாவின் நன்கொடையை பெற அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்த தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும்.

குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

துணித் தொகைக்குரியவாறு கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளுக்கமைய, இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தின் (SLITA) மூலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், குறித்த சீருடைத் துணிகள் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமானதென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமையன 2025 ஆம் ஆண்டுக்கு அனைத்து பாடசாலை மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சீருடைத் துணையை விநியோகிப்பதற்கான சீன அரசின் நன்கொடையைப் பொறுப்பேற்பதற்காக கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 

Leave a comment

Comment