TamilsGuide

நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் அவசியம் – அரசாங்கம்

நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

புதிய நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் மேற்படி சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி முடிவெடுக்கப்படும்.

நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்கள் தேவையா அல்லது புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2023 செப்டம்பர் இல் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலம், 2024 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 

Leave a comment

Comment