அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், வெற்றி பெறுவது கமலா ஹாரிஸா, டொனால்ட் டிரம்பா என்ற ஆவல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாஸ்டர்டாமஸ் கூறுவது கூறுவது என்ன? என்று பார்ப்போம்.
ஆலன் லிச்மேன் என்பவர் வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர் மற்றும் அரசியல் கணிப்புகளை வெளியிடுபவராகவும் அறியப்படுபவர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது பற்றி அவர் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் ஒரு புதிய பாதை அமைக்கும் ஜனாதிபதி, முதல் பெண் ஜனாதிபதியாக கமலா ஹாரிசே வெற்றி பெற போகிறார்.
ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வழிவந்த முதல் கலப்பின ஜனாதிபதியை நாம் பெற இருக்கிறோம். அமெரிக்கா எதனை நோக்கி செல்கிறது என்பதற்கான அறிகுறி போன்றது இது.
பெரும்பான்மையாக இருக்கிறவர்கள் விரைவாக சிறுபான்மையினராக ஆகும் நாடாக நாம் மாறி வருகிறோம். என்னை போன்ற வெள்ளையினத்தினரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்றார்.
தன்னுடைய கணிப்புகள் நிச்சய தன்மை கொண்டவை என்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் மழுப்பலாக கூறுபவை அல்ல என்றும் கூறுகிறார். இதனால், தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.