தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் முன்னதாகவோ தாய்லாந்தில் இறங்கிய பிறகோ விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 11-ம் தேதி நிறைவடைய இருந்த விசா சலுகையை காலவரம்பின்றி தாய்லாந்து அரசு நீட்டித்துள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி வரலாம். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்ளூரில் இருக்கும் இமிகிரேஷன் ஆபீஸில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வருகையை எக்ஸ்டென்ட் செய்து கொள்ளலாம். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்திருக்கும் காரணத்தினால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது.
ஆவணங்களே இல்லாத புதிய நடைமுறையின் காரணமாக 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரத்து 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. விசா இல்லாத நுழைவு காரணமாக வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.