TamilsGuide

டிரம்ப் வெற்றி பெறுவார்- ரூ. 26 ஆயிரம் கோடி வரை சென்ற சூதாட்டம்

வல்லரசு நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அமெரிக்காவில் 47-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது.

பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. புதிய ஜனாதிபதி கமலா ஹாரிசா? அல்லது டிரம்பா? என்பது இன்று (புதன்கிழமை) தெரியவரும்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நேரத்தில் புதிய ஜனாதிபதி யார் என்ற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது. இதில் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று அதிகமானோர் பணம் கட்டியுள்ளனர். இதன் மூலம் இந்த சூதாட்ட சந்தையில் டிரம்பின் வெற்றி வாய்ப்பு 58.6 சதவீதத்தில் இருந்த 60.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், சூதாட்ட சந்தையில் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.26 ஆயிரத்து 880 கோடி பந்தய தொகையாக கட்டப்பட்டுள்ளது என்பதும், அங்கு இதுபோன்ற சூதாட்டம் சட்டப்பூர்வமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment