அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்புதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஸ்விங் மாகாணமான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழும்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
இதில் ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப்பு முன்னிலை பெற்று வருகிறார். அதேவேளையில் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் முன்னிலை பெற்று வருகிறார். பென்சில்வேனியாவில் 19 எலக்ட்டோரல் காலேஜ் (Electoral College) வாக்குகள் உள்ளன. மிச்சிகனில் 15 வாக்குகள் உள்ளன. இதில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ்க்கு 34 வாக்குகள் கிடைக்கும்.
பென்சில்வேனியாவில் இதுவரை 68 சதவீத வாக்குகளும், மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.