TamilsGuide

நிலத்தை குத்தகைக்கு விட்டு ரூ 500 கோடிகள் வரை சம்பாதிக்கும் மன்னர் மற்றும் இளவரசர் வில்லியம்

பிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டு பல மில்லியன் பவுண்டுகளை சார்லஸ் மன்னரும் பட்டத்து இளவரசர் வில்லியமும் சம்பாதிப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வரிகளில் இருந்து விலக்கு

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் வசமிருக்கும் லான்காஸ்டர் மற்றும் கார்ன்வால் நிலப்பகுதியானது அரசாங்கத்தால் வணிக வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவையாகும்.

அதில் இருந்து திரட்டப்படும் தொகை அரச குடும்பத்தினரின் சொந்த தேவைக்கும் சமூக சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. வெளியான ஆய்வறிக்கையில், இந்த நிலங்களை பொது சேவைகளுக்காக குத்தகைக்கு விடுவதால் குறைந்தது 50 மில்லியன் பவுண்டுகள் வரையில், இந்திய மதிப்பில் சுமார் 543 கோடி அளவுக்கு இருவரும் சம்பாதிக்கின்றனர்.

லான்காஸ்டர் மற்றும் கார்ன்வால் நிலப்பகுதியானது 5,400 பேர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்றே தெரிய வந்துள்ளது. லண்டனில் செயல்படும் Guy’s and St Thomas மருத்துவமனை 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டதில் 11.4 மில்லியன் பவுண்டுகள் செலுத்துகிறது.

மேலும் சார்லஸ் மன்னர் காற்றாலைகளில் இருந்து மட்டும் குறைந்தபட்சம் 28 மில்லியன் பவுண்டுகளை சம்பாதிக்கிறார். Dartmoor சிறைச்சாலைக்கு 25 ஆண்டுகளுக்கு நிலப்பகுதியை குத்தகைக்கு விட்டுள்ளதில் இளவரசர் வில்லியம் 37 மில்லியன் பவுண்டுகளை சம்பாதிக்கிறார்.
தரநிலைகளை மீறியுள்ளதாக

மட்டுமின்றி, Camelford இல்லத்தில் இருந்து மட்டும் 2005 முதல் வாடகை தொகையாக 22 மில்லியன் பவுண்டுகளை வில்லியம் சம்பாதித்துள்ளார்.

மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் சார்லஸ் மன்னரும் இளவரசர் வில்லியமும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தாலும், இவர்கள் குத்தகைக்கு விட்டுள்ள குடியிருப்பு வளாகங்களில் பெரும்பாலானவை அடிப்படை அரசாங்க தரநிலைகளை மீறியுள்ளதாகவே கண்டறியப்பட்டுள்ளது.

அரச குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் சுரங்கம் மற்றும் குவாரி நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment