TamilsGuide

அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்கு – ரவி குமுதேஷ்

”அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் காணப்படும் நெருக்கடிகளுக்கு உண்மையாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் பணத்திற்காக மக்களை ஒன்றுசேர்த்தவர்கள் அல்ல. அரசாங்கத்திற்குள்ளே இருந்து மற்றுமொரு அரசாங்கத்தினை உருவாக்குவதற்கும் நாம் தயார்.

நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கத்  தயாராகவே இருக்கின்றோம்.

அதேபோல் அரசாங்கம் அதிகார போக்கில் தன்னிச்சையாக செயற்படும் பட்சத்தில் பொதுமக்களின் ஆதரவில் எதிர்த்தரப்பாக இருந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் தயாரகவே உள்ளோம்”  இவ்வாறு ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment