கட்சி என்ற ரீதியில் முன்னோக்கி செல்வது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கு முறையான சேவையினை வழங்குவதே ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் எதிர்ப்பார்ப்பாகும் என கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் அரச வளங்கள் கொள்ளையிடப்படுவதனை நிறுத்த வேண்டும். ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாட்டின் தேசிய வளங்கள் சூறையாடப்படுகின்றன. இதனை முற்றாக நிறுத்துவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்.நாட்டில் அரசசேவைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.
பொதுமக்களுக்கான சேவைகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இவற்றுக்கு தீர்வுகாண வேண்டும். கட்சி என்ற ரீதியில் முன்னோக்கி செல்வது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கு முறையான சேவையினை வழங்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
உண்மையான தூய அரசியலையே நாம் முன்னெடுத்து செல்வோம்.எமது குழுவில் எவரும் கள்வர்கள் இல்லை. மக்களின் உரிமைகளுக்காக மக்களுக்காக சேவையாற்றக்கூடியவர்களே உள்ளனர்.