• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்

இலங்கை

காலியில் நேற்று (26) ஆரம்பமான இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட கமிந்து மெண்டிஸ், அரைசதம் கடந்து புதிய வரலாறுச் சாதனை படைத்தார்.

இப் போட்டியில் இலங்கை அணி சார்பில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஐந்தாவதாக கமிந்து மெண்டிஸ் களமிறங்கியிருந்தார்.

இந்த இன்னிங்ஸில் அவர், தனது அரை சதத்தை வெறும் 52 பந்துகளில் பெற்றார்.

இதனால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுகத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெண்டிஸ் பெற்றுள்ளார்.

இதன் மூலம் 25 வயதான சவுத் ஷகீல் வைத்திருந்த உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

கடந்த ஆண்டுதான் பாகிஸ்தான் நட்சத்திரம் சவுத் ஷகீல் (7 அரைசதம்)இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சுனில் கவாஸ்கர், பாசில் புட்சர், சயீத் அஹமட் மற்றும் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்கள் அறிமுகத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் பெற்றிருந்தனர்.

நேற்றைய போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தினேஷ் சந்திமால் அதிகப்படியாக 116 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்த நிலையில், அஞ்சலே மெத்தியூஸ் 78 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.
 

Leave a Reply