TamilsGuide

கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம் செலுத்தும் நிலை

உலகம் முழுவதும் மக்கள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின் நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் இந்த நிலையில், கனடாவில் 60 லட்சம் ரூபாய் (100,000 டொலர்) ஆண்டுச் சம்பளம் போதவில்லை என்று கூறிய இந்திய தொழில்நுட்ப நிபுணர் சமீபத்தில் வைரலாகியுள்ளார்.

Piyush Monga என்ற பிரபல Instagram பக்கத்தில் நடந்த வீடியோ ஒன்றில், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண் ஒருவர், தனது ஆண்டு வருமானம் மற்றும் கனடாவில் வசிப்பதில் இருக்கும் சிக்கல் குறித்து பேசினார்.

பணியிடத்தின் வகையை பற்றி கேட்டபோது, ​​அந்தப் பெண் ஒரு வங்கி நிறுவனத்தில் Test Lead-ஆக பணியாற்றுவதாகவும், தனது 10 ஆண்டு அனுபவத்தை கொண்டு ஆண்டுக்கு $100,000 (ரூ.60 லட்சம்) வரையிலான சம்பளம் பெறுவதாகவும் கூறினார்.

ஆனால் இது தற்போதைய பொருளாதார சூழலில் போதுமானது அல்ல என்றும், இங்கு வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகம் என்றும் அவர் கூறினார்.

கனடாவின் ரொறன்ரோ நகரத்தில் வசிக்கும் அப்பெண், "இந்தியாவில் வாழ்க்கைச் செலவுகள் இவ்வளவு மோசமாக உணரப்படுவதில்லை" என்றும், பண்ணீர் கூட இருமடங்காக உயர்ந்ததாக குறிப்பிட்டார்.

தான் வசிக்கும் அறைக்கு மாதம் 1600 டொலர் (சுமார் ரூ.1 லட்சம்) வாடகை செலுத்துவதாக கூறினார்.

இது கனடாவில் வாழ அவருக்கு அதிகபட்சம் பணம் செலவிட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

Leave a comment

Comment