• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள்

இலங்கை

மீண்டும் வரிசை யுகம் உருவாக இடமளிக்க வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதுளையில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ” ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். இந்நாட்டு மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள் வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய மக்களை தியாகம் செய்ய விரும்பினர்.

மக்களைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் என்னுடன் இணைந்தனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம். 2025ஆம் ஆண்டில் மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்க முடியும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, ​​ பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 05 வருடங்கள் ஆகும். ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டோம். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அதன் வித்தியாசத்தை மக்கள் காணலாம்.

நாங்கள் இன்னும் தொங்கு பாலத்தில் இருக்கிறோம். இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பயணத்தை நிரந்தரமாக்க வேண்டும்.

தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியாது. எனவே செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ இவ்வாறு  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply