TamilsGuide

தனிநபர் வருமான வரி வீதத்தை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

இதுவரை மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் வரிக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், புதிய திருத்தத்திற்கு அமைவாக 150,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் தனிநபர் வருமான வரிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே 06 வீதம் முதல் 36 வீதம் வரை 06 பிரிவுகளின் கீழ் அறவிடப்பட்ட வரி வீதமும் குறைக்கப்படவுள்ளது.

புதிய திருத்தத்திற்கு அமைவாக 150,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை தனிநபர் வருமானத்தின் மீது 02 வீத வரி அறவிடப்படவுள்ளது.

200,000 ரூபாவிலிருந்து 300,000 ரூபா வரையான பிரிவுக்கான வரி வீதம் 4.2 ஆகவும், 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை 8.8 வீதமும் , 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை 13.5 வீதமும், 500,000 ரூபா 750,000 ரூபா வரை 18 வீதமும், , 750,000 ரூபா முதல் 10,000,00 ரூபா வரை 24 வீதமும் , 10,000,00 ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானத்திற்கு 27 வீதமும் தனிநபர் வரி வீதமாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
 

Leave a comment

Comment