TamilsGuide

கனடாவில் இருந்து காணி வாங்க சென்றவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிவிட்டு கம்பி நீட்டிய கிளிநொச்சித் தரகர்!

காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குறித்த நபர் தெல்லிப்பழையில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் காணி ஒன்றினை கொள்ளளவு செய்வதற்காக தரகர் ஒருவருடன் தொடர்பினை பேணி அவரோடு பல இடங்களுக்கு பயணித்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த குறித்த தரகர், கனடாவில் இருந்து சென்றவரின் 85 இலட்சம் ரூபாவினை திருடிச் சென்றுள்ளார். குறித்த புலம்பெயர் நபர் நான்கு நாட்களின் பின்னர் தனது பணத்தினை தேடிப் பார்த்துவிட்டு பணத்தினை காணாத நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment