TamilsGuide

பெண்கள் மேம்பாட்டுக்கென ஒன்ராறியோ $6.9 மில்லியன் முதலீடு

பல்வேறு துறைகளில் பெண்களுக்கான அத்தியாவசிய திறமைகள் மற்றும் பாதுகாப்பான வேலைகளை உருவாக்கி உதவுவதற்காக ஒன்ராறியோ அரசு 6.9 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இம்முன்முயற்சியானது, 3,000 வரையிலான பெண்களை அவர்களின்  தலைமைத்துவ, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவென வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களில் உள்வாங்கி உருவாக்க வழிவகுக்கும். மேலும் இந்நிதி ஒதுக்கீடு, ஆண்கள் பெரும்பான்மை வகிக்கும் துறைகளான கட்டுமானத்துறை மற்றும் உற்பத்தித்துறை போன்றவற்றில் பெண்கள் எதிர்கொள்ளும் சாவால்களைத் தகர்ப்பதில் பெரும்பங்காற்றும். அமைச்சர் விஜய் தணிகாசலம் இம்முயற்சியைப் பாராட்டியதுடன், இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "பெண்களின் திறமைகளையும் அவர்களின் துறைசார் வளர்ச்சியையும் ஊக்குவித்து அவற்றில் முதலீடு செய்வதன் மூலம், நாம் வலுவான தொழிலாளர் சக்தியை உருவாக்குவது மட்டுமல்லாது, ஒன்ராறியோவெங்கும் நீண்ட காலத்துக்கான பொருளாதார வளர்ச்சியையும் கட்டமைக்கிறோம்" என்றார். இம்முதலீடு போட்டிமிகு பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான மாநிலத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
 

Leave a comment

Comment