TamilsGuide

தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் இன்று சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,02,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,85,600 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,84,750 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,520.88 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment