TamilsGuide

டொனால்டு டிரம்பை நேரடியாக விமர்சித்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் குறித்து பேசும்போது டொனால்டு டிரம்ப் "நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் இந்த நிலையை எட்டிருக்காது. இஸ்ரேலை கமலா ஹாரிஸ் வெறுக்கிறார். அதேபோல் அந்த பிராந்தியத்தில் உள்ள அரபு மக்களையும் வெறுக்கிறார்" என்றார்.

அதற்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் சொல்வது உண்மையல்லை. இஸ்ரேலுக்கு தனது ஆதரவு" என வலியுறுத்தினார்.

மேலும் கமலா ஹாரிஸ் "அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள். நீங்கள் அவமானம் என அவர்கள் சொல்கிறார்கள்" என நேரடி தாக்குதலை முன்வைத்தார்.

டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் நிர்வாகத் தோல்வியை தொடர்ந்து முன்வைத்து கமலா ஹாரிஸை தாக்குதல் நடத்த தொடங்கினார். இதற்கு "நீங்கள் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை" என கமலா ஹாரிஸ் பதில் அளித்தார்.
 

Leave a comment

Comment