TamilsGuide

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் விழுந்த யானை மீட்பு

முல்லைத்தீவு, செம்மலை புளியமுனை பகுதியில் காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

இதனை அவதானித்த விவசாயிகள், பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கத்தினருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்த அதிகாரிகள், யானையை மீட்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மிக நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குறித்த காட்டு யானையானது, வெளியில் எடுக்கப்பட்டு காட்டிற்குள் அனுப்பி விடப்பட்டுள்ளது.

இரண்டு வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானை நீர் அருந்துவதற்காக பயணித்தபோதே கிணற்றில் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

முல்லைத்தீவு செம்மலை புளியமுனை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்வதால், சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

இங்கு யானை வேலி அமைத்து தருவதாக பல தடவைகள் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரையிலும், யானை வெலி அமைத்து தரப்படவில்லை என இங்கு வாழும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment