TamilsGuide

சஜித்தின் பேரணியில் வெடி விபத்து! 7 பேர் காயம்

எதிர்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த பேரணியில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்,  ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளைப் பற்றவைத்துள்ளனர் எனவும், இதனால் அங்கிருந்த ஐந்து பொலிஸார் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment