TamilsGuide

செம்மணியில் அஞ்சலி

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று  செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில், நடைபெற்ற நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment