TamilsGuide

M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். 

M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்...

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.....
 

Leave a comment

Comment