TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல் - சிறைக் கைதிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறைக்கைதிகள், வாக்களிக்கும் உரிமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகள் ஒன்றிணைந்து, இந்த விடயத்தில் எதிர்கொள்ளப்படவுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சட்டரீதியாக தகுதியுள்ள கைதிகளை பங்குபற்றுவதில் உள்ள நடைமுறை தடைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு விடயங்கள் மற்றும் சிறை வசதிகளுக்குள் வாக்களிக்கும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவை ஆராயப்பட்டுள்ளன.

இந்த தடைகள் இருந்தபோதிலும், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் கைதிகளின் வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளனர்.

மேலும், அடையாளம் காணப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கு சாத்தியமான தீர்வுகளை எடுப்பதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment