TamilsGuide

ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் - 104ஐ உறுதிப்படுத்தியது

இன்று, செப்டம்பர் 5, 2024 அன்று, ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் - 104ஐ உறுதிப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தமிழின அழிப்பு நடைபெற்றதென்பதை மறுப்பவர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான சவால் நிராகரிக்கப்பட்டதோடு, இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புக் குறித்து ஒன்ராறியோவில் வாழ்வோர் தொடர்ந்தும் கல்வி கற்கவும் அதனைப் பற்றிக் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சட்டமூலம் 104 ஐப் பாதுகாக்க அயராது உழைத்த அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தமிழ் இளையோர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஒன்ராறியோவில் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாகும் என்றால் அது மிகையாகாது.

இவ்வண்ணம்,

விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ - றூஜ் பார்க்.

Leave a comment

Comment