TamilsGuide

தி கோட் படத்தை திரையரங்கில் கண்டுகளித்த திரிஷா, சிவகார்த்திகேயன்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். இந்நிலையில், சென்னை மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் தி கோட் படத்தை பார்ப்பதற்கு நடிகை திரிஷா வந்துள்ளார்.

அதே போல் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் கோவையில் தி கோட் படத்தை கண்டு களித்தார்.

Leave a comment

Comment