TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல் - முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை 533 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தொடர்பாக 533 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 8 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதில் ஐவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இடமாற்ற நியமனங்கள்  இவற்றுள் உள்ளடங்குகின்றன. அதுமாத்திரமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளன.இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதேபோல் போலி தேர்தல் பிரசார அலுவலகங்கள் அமைக்கப்பட்டு கருத்துக் கணிப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில தனியார் நிலையங்கள் ஊடாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மையில் எம்பிலிப்பட்டிய பகுதியில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டதை  அவதானிக்க முடிந்தது” இவ்வாறு ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment