TamilsGuide

ஆக்லெண்ட் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் - கோழிப்பண்னை செல்லதுரை

தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும்.

தர்மதுரை திரைப்படம் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்ல துரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரிகிடா சகா இதற்கு முன் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் ரியோராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ படத்தில் ஏகன் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படம் 22 ஆம் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் செப்டம்பர் 18 ஆம் தேதி திரையிடவுள்ளனர். ஆக்லெண்ட் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என பெருமையை பெறுகிறது கோழிப்பண்ணை செல்லதுரை.
 

Leave a comment

Comment