TamilsGuide

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகப்பணி 95 வீதம் நிறைவு – தபால் திணைக்களம்

இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

712,318 அரச துறை ஊழியர்கள் 2024 இல் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் , மொத்த வாக்காளர்களில் 76,977 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரித்துள்ளது.

இதேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு காலம் செப்டம்பர் 4 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Leave a comment

Comment