TamilsGuide

5 மாவட்டங்களின் 29 பிரதேசங்கள் டெங்கு அபாய பகுதிகளாக அடையாளம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா , களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 ஆயிரத்து ,552 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக  15 ஆயிரத்து 120 டெங்கு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால், பொதுமக்கள் சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பேணுமாறு  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a comment

Comment