TamilsGuide

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் - வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இப்படத்தில் நடித்த நடிகர்களில் சிலர் டப்பிங் பேசுவதாக படக்குழு சார்பில் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment