TamilsGuide

அலங்காரக் கந்தனின் மாம்பழத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று  சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன்படி இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.

நாடளாவிய ரீதியில் இருந்தும் , வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அலங்கார கந்தனை தரிசித்ததோடு , நேர்த்தி கடன்களையும் நிறைவேற்றியிருந்தனர்.

மாம்பழத்திற்காக உலகை சுற்றி வந்த முருகன், பிள்ளையார் ஆகியோரின் புராண கதையும் மாம்பழம் கிடைக்காததால் தனது நகை, உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் அமர்ந்த புராண கதையும் மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment