TamilsGuide

அநுர ஜனாதிபதியானால் 6 மாதமே பதவியில் இருப்பார் – ஹிருணிகா

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் அதிகபட்சமாக 6 மாத காலம் தான் அந்தப் பதவியில் இருப்பார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற சஜபா அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த அநுர குமார திஸாநாயக்க மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ஒருவரால் தற்போதைய இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்ப முடியுமா?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக 2 வருடங்கள் பதவியில் இருப்பார் என்றும், அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பல வழக்குகளை வாபஸ் பெறவே அவர் ஜனாதிபதியானார் என்றும் தாம் முன்னர் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a comment

Comment