TamilsGuide

Nepotism தமிழ் சினிமாவுல கிடையாது - பரத்

பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ். இதில் பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், அஞ்சலி நாயர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

ஃபிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தை தயாரித்துள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

சென்னையை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாகி இருப்பதால் படத்துக்கு ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 26-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பரத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் தாண்டி விட்டோம். திறமை இருந்தால் வெற்றி பெறலாம். பேராசை என்பது எனக்கு எதிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அபிராமி பேசியதாவது:-

படத்தில் நான் ஒரு திருநங்கைக்கு தாயாக நடித்துள்ளேன். ஒரு நடிகைக்கு ஒரு கதை வரும்போது எப்படியாவது இதை பண்ணிவிட வேண்டும் என்று தோன்றும். அப்படி பண்ணிய படம் தான் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படம். துப்புரவு தொழிலாளியாகவும் நடித்து உள்ளேன், திருநங்கைக்கு தாயாகவும் நடித்து உள்ளேன். படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரிடம் நான் போட்ட கண்டிஷன் என்னவென்றால் படத்தின் கதைப்படி எனக்கு மகளாக நடிப்பவர் ஒரு திருநங்கையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு இயக்குனரும் சம்மதித்தார்.

நமக்காக பணிபுரிவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் தான் நினைப்பார்கள் அப்படிதான் படத்தின் தயாரிப்பாளர் எம்.பி. ஆனந்த் பார்த்துக் கொண்டார். தயாரிப்பாளர் ஆனந்திடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் இப்படியே இருங்கள். இந்த படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றதும் மாறி விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 

Leave a comment

Comment