TamilsGuide

அரசியல் மாற்றத்திற்காகவே ஜனாதிபதியுடன் இணைந்தேன் – மஹிந்தானந்த

அரசியல் களத்தில் இம்முறை மாறுபட்ட நிலைமை காணப்படுவதால் நாட்டு மக்களது நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து  பயணிப்பதற்குத் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தொிவித்துள்ளாா்.

கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” கூட்டணியின் பொதுக்கூட்டத்திலேயே அவா் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த மஹிந்தானந்த அழுத்கமகே,

”நான் எனது அரசியல் வாழ்வில் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்ததில்லை. கடந்த முறை எமது தாய் கட்சியான சுதந்திர கட்சியின் மேடையில் கூட ஏறவில்லை.

ஆனால் இம்முறை மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் 72 உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றனர்.

எதிர்கட்சிகளின் தலைவர்கள் சஜித்தின் மேடையில் ஏறும்போதும், அவர்களின் கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வந்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து கொள்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் மக்கள் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்ட வேளையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சஜித்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அனுரவும் சவாலை ஏற்கவில்லை. ரணிலுக்கு ஒரேயொரு அழைப்புதான் விடுக்கப்பட்டது. நாட்டை ஏற்று, நாட்டை மீட்டெடுத்துத் தந்தார்” என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment